/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையில் பீட்ரூட் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
கோடையில் பீட்ரூட் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 20, 2025 11:16 PM
உடுமலை,: உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக பீட்ரூட் சாகுபடியாகிறது. களிமண் விளைநிலங்களில் மட்டும், பிரத்யேகமாக, மூன்று சீசன்களில், இச்சாகுபடியை மேற்கொள்கின்றனர்.
அறுவடைக்கு, காய்கள், 90 நாட்களில் தயாராகிறது. இந்தாண்டு, அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், குறைவான பரப்பளவிலேயே பீட்ரூட் நடவு செய்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: விதை, இடுபொருட்கள் விலை உயர்வால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப விலை கிடைப்பதில்லை. கோடை சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தற்போது விதை நடவு செய்துள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.