/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுந்தாள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
/
பசுந்தாள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 10, 2025 02:30 AM

பு ரட்டாசி பட்டம் வடகிழக்கு பருவமழை காலத்தில் துவங்குகிறது. புரட்டாசியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு பருவ மழை சாதகமாக அமையும். தொடர்ந்து நிலத்தில் பயிர் சாகுபடி செய்வதால் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, பயிர் வளர்ச்சி குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன் மண் மற்றும் நீர் வளம் கெடுகிறது.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள், செலவை குறைத்து, மகசூலை அதிகரிக்க விவசாயிகள் தொழு உரம், பயிர் சுழற்சி முறையில் மாற்று பயிர் சாகுபடி, பசுந்தாள் உர பயிர் சாகுபடி என மாறி வருகின்றனர்.
தொழு உரம் தயாரிக்க கால்நடைகள் அதிக அளவு தேவை. அதற்கு தேவையான மேய்ச்சல் நிலம் அவசியம். பலர் சிறு விவசாயிகள். இருக்கும் நிலத்தைக் கொண்டு உரம் தயாரிப்பதற்கு பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி சிறந்த தீர்வாக உள்ளது. பல தானிய சாகுபடி, தட்டை, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை, கொள்ளு ஆகியவற்றை விவசாயிகள் பசுந்தாள் உரமாக பயன்படுத்துகின்றனர்.
இவற்றை சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் நிலத்தில் சத்து அதிகரித்து அடுத்து சாகுபடி செய்யும் பயிர்கள் நல்ல மகசூலை தருகிறது. இயற்கை விவசாயத்தை விரும்பும் விவசாயிகள் இதுபோன்று மண்வளத்தை மேம் படுத்துவது அதிகரித்து வருகிறது.