/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனிப்பயிராக பப்பாளி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்
/
தனிப்பயிராக பப்பாளி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தனிப்பயிராக பப்பாளி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தனிப்பயிராக பப்பாளி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்
ADDED : டிச 11, 2025 05:11 AM

உடுமலை: நிலையான விலை கிடைப்பதால், தனிப்பயிராக பப்பாளி சாகுபடி செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு பல்வேறு சாகுபடி விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தற்போது தென்னைக்கு மாற்றாக, பப்பாளி, அத்தி உள்ளிட்ட சாகுபடிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
பப்பாளி சாகுபடிக்கு, விளைநிலங்களில் மேட்டுப்பாத்தியும், மல்ஷிங் ஷீட் பரப்பி, சொட்டு நீர் பாசனம் அமைக்கின்றனர். இதனால், நீர் சிக்கனமாகிறது; உரங்களும் நேரடியாக செடிகளுக்கு கிடைக்கிறது.
அவ்வகையில், தற்போது பரவலாக உடுமலை குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து, பப்பாளி கிலோ, 25 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடியில், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்துவது முக்கிய சவாலாக உள்ளது. மாவுப்பூச்சி உள்ளிட்ட நோய்த்தாக்குதல் பரவாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சிலர் பப்பாளியில் இருந்து பெறப்படும் பாலை சேகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்,' என்றனர்.

