/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சணப்பை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
சணப்பை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 10, 2024 04:44 AM
பொங்கலுார் : பொங்கலுார் வட்டாரத்தில், சணப்பை சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விரைவில் கார்த்திகை பட்டம் துவங்க உள்ளது. கார்த்திகை பட்டத்தில் வெங்காயம், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். தொடர்ந்து பயிர் சாகுபடி செய்வதால் மண்ணில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதை தவிர்ப்பதற்காக விவசாயிகள் சணப்பை, கொள்ளு போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். அவற்றை மடக்கி உழுவதன் மூலம் பயிருக்கு தேவையான நுண்ணுாட்ட, பேரூட்ட சத்துக்கள் கிடைக்கிறது. இதற்காக முன்கூட்டியே பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து கார்த்திகை பட்ட சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.