/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டைக்கடலை சாகுபடி; ஆர்வம் இழந்த விவசாயிகள்
/
கொண்டைக்கடலை சாகுபடி; ஆர்வம் இழந்த விவசாயிகள்
ADDED : டிச 21, 2024 11:32 PM

பொங்கலுார்: பொங்கலுாரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கரிசல் மண் உள்ளது. இது நீண்ட காலத்துக்கு மழை நீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது.
இதில் ஈரப்பதம் மாத கணக்கில் இருக்கும். இதில் விவசாயிகள் ஆண்டு தோறும் கொண்டைக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். கார்த்திகை மாதத்தில் சாகுபடி செய்யப்படும் கொண்டைக்கடலை சிறிதளவு பெய்யும் மழை மற்றும் பனியை கொண்டு வளர்ந்து விடும்.
தை மாதத்தில் அறுவடைக்கு வரும். சமீப காலங்களில் நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு உயர்ந்துள்ளதால் கணிசமான விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடி செய்த நிலத்தை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக வேலை ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. கொண்டைக்கடலை விற்பனை செய்வதில் கிடைக்கும் வருமானத்தை விட உற்பத்தி செலவு இப்பகுதியில் அதிகரித்துள்ளது. கணிசமான விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடி செய்த நிலங்களை தரிசாக போட்டுள்ளனர்.
அவற்றில் சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர் செடிகள், முட்செடிகள் வளர்ந்துள்ளது. விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்ததால் கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு மிகவும் சுருங்கி விட்டது.