/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி துவக்கம்
/
உழவர் சந்தை உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி துவக்கம்
உழவர் சந்தை உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி துவக்கம்
உழவர் சந்தை உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 05, 2025 05:48 AM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு உழவர் சந்தை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
மாநிலம் முழுதும், 25 உழவர் சந்தைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்தாண்டு வேளாண் வணிகத்துறை மூலம், ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு வழங்கிய உழவர் சந்தை பட்டியலில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தையும் இடம் பெற்றது; ஆனால், பணிகள் துவங்காமல் இருந்தது. இந்நிலையில், உழவர் சந்தை முகப்பில் புதிய நுழைவு வாயில் கட்டும் பணி துவங்கியுள்ளது.
உழவர் சந்தை நிர்வாக அலுவலர் செல்வக்குமார் கூறுகையில்,'தெற்கு உழவர் சந்தைக்கு வந்து செல்லும் விவசாயிகள், வாடிக்கயைாளர் எண்ணிக்கை அதிகம் என்பதால், வாகனங்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக நுழைவு வாயில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
புதிய தராசுகள் விவசாயிகளுக்கு வழங்கவும், கடைகள் முன் எலக்ட்ரானிக் டிஸ்பிளே விலை பட்டியல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் கழிப்பிடம், தரைத்தளம், வாகன பார்க்கிங் தனியிடம் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்து இம்மாத இறுதிக்குள் துவங்கும்,' என்றார்.