/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் விவசாயிகள் உண்ணாவிரதம்
/
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் விவசாயிகள் உண்ணாவிரதம்
ADDED : மார் 02, 2026 05:55 AM

பொங்கலுார்: ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற கோரி பொங்கலுாரில் நேற்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்(பி.ஏ.பி.) கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு பாசன நீராதாரமாக உள்ளது.
பி.ஏ.பி. திட்டத்தில் விடுபட்டு போன ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நேற்று திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதன் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற செயல் தலைவர் வெற்றி கூறுகையில், ''திட்டத்தை நிறைவேற்றக்கோரி அரசியல் சார்பு இல்லாமல் போராடுகிறோம். நேற்று முன்தினம் இரவு மேலிட உத்தரவு என்று கூறி போராட்ட பந்தலை போலீசார் அகற்றினர். உண்ணாவிரதத்தை ரத்து செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் கலைந்து சென்று விட வேண்டும் என்று கெடுபிடி செய்தனர். ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் தி.மு.க., அரசு எடுக்கவில்லை.
தற்போது போராடும் செயலையும் ஒடுக்குகின்றனர். திட்டத்தை தி.மு.க., முடக்க நினைக்கிறது.
விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. பி.ஏ.பி. நீர் பாயும், 15 தொகுதிகளில் அதற்கான விளைவை தி.மு.க., சந்திக்கும்'' என்றார்.
உண்ணாவிரத இறுதியில், ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.
மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் ரவி, காங்கயம் -வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்

