/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் சாகுபடி பயிற்சி விவசாயிகள் பங்கேற்பு
/
பயிர் சாகுபடி பயிற்சி விவசாயிகள் பங்கேற்பு
ADDED : நவ 05, 2025 08:10 PM
- நமது நிருபர் -
காலநிலை மாற்றத்திற்கேற்ப தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது.
திருப்பூர் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இணைந்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர் சாகுபடி பற்றிய பயிற்சியை, இடுவாய் மாநகராட்சி அறிவியல் பூங்காவில் நடத்தியது.
இதில், திருப்பூர், பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் புனிதவேணி வரவேற்றார். காலநிலை மாற்றம், தோட்டக்கலை, பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் பற்றி தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பேராசிரியர் கண்ணன் விளக்கினார்.
அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா நன்றி கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எலுமிச்சை நாற்றுகள் மற்றும் விதைப்பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

