ADDED : அக் 25, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில், 100 ரேஷன் கடைகளில் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அவிநாசி அருகே சேவூரில், ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுசாமி வரவேற்றார் கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலத் தலைவர் சண்முகம் பேசினார்.
திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஊராட்சி தலைவர்கள் கணேசன் (வேட்டுவபாளையம்), ரவிக்குமார் (முறியண்டம்பாளையம்) முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய சங்க பொறுப்பாளர்கள் நந்தகுமார் செல்வராஜ், ரமேஷ், தயாநிதி, செய்தி தொடர்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் சேவூர், தெக்கலுார், பெருமாநல்லுார் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.