/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீரமைக்கப்படாத பாசன கால்வாய்கள் மெட்ராத்தி விவசாயிகள் போராட்டம்
/
சீரமைக்கப்படாத பாசன கால்வாய்கள் மெட்ராத்தி விவசாயிகள் போராட்டம்
சீரமைக்கப்படாத பாசன கால்வாய்கள் மெட்ராத்தி விவசாயிகள் போராட்டம்
சீரமைக்கப்படாத பாசன கால்வாய்கள் மெட்ராத்தி விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 06, 2026 05:39 AM

உடுமலை: உடுமலை அருகே மெட்ராத்தி சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
விரைவில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், பகிர்மான மற்றும் இதர கால்வாய்களில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று மாலை, மெட்ராத்தி-பூளவாடி ரோட்டில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பராமரிப்பில்லாத கால்வாய்களில் தண்ணீர் திறந்தால் கடைமடை பகுதிகள் பாதிக்கும். தண்ணீர் திறப்புக்கு முன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.
பொதுப்பணித்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.