ADDED : அக் 08, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாமாயிலை தடை செய்து மாற்றாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூட்டங்களில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 ரேஷன் கடைகளில் 100 நாள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
82வது நாளான நேற்று, அவிநாசி அடுத்த புதுப்பாளையம் ரேஷன் கடை முன்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.