/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறியாளருக்கு தீர்வு விவசாயிகள் வேண்டுகோள்
/
விசைத்தறியாளருக்கு தீர்வு விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 12, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறியாளர்கள், கடந்த, 24 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தக்கோரி, 4,000க்கும் அதிகமான விசைத்தறி உரிமையாளர்கள், உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழக அரசு தலையிட்டு, விசைத்தறியாளர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

