ADDED : பிப் 21, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி விவசாயி போராட்டத்துக்கு ஆதரரவு தெரிவித்து, விவசாயிகள் மீது தாக்குதலை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சித்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால், குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று கோஷமிட்டனர்.
இதில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், மாநில அவை தலைவர் பாலசுப்ரமணியம், மாநகர மாவட்ட தலைவர் கோகுல் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

