/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் முப்பெரும் விழா; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
விவசாயிகள் முப்பெரும் விழா; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
விவசாயிகள் முப்பெரும் விழா; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
விவசாயிகள் முப்பெரும் விழா; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : அக் 13, 2024 11:31 PM

அவிநாசி: ரேஷனில் தேங்காய் எண்ணெயை மானிய விலையில் விற்றல் உட்பட 12 கோரிக்கைகள், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முப்பெரும் விழாவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
தெக்கலுாரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் வேலுச்சாமி வரவேற்றார்.
விவசாய சங்க அலுவலகம் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச்சங்கத்தை துவக்கிவைத்து, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசி வழங்கினார். திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றினார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசும்போது, ''மின் கட்டணம் உயர்வு, உரம் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட விவசாயிகள் ஒன்று பட வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.
கள் கடையை திறக்க வேண்டும். விவசாயிகள் தாலி, நிலம் ஆகியவை விற்று பிழைத்து வருகின்றனர். விவசாயிகள் எந்த போராட்டம் செய்தாலும் ஹிந்து முன்னணி அவர்களுடன் இணைந்து போராடும்'' என்றார்.
கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவர் வெற்றி உள்ளிட்டோர் பேசினர். மேலும் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய வடமாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் பேசினர்.
12 தீர்மானங்கள்
மான், மயில், காட்டுப்பன்றி உட்பட வனவிலங்குகளின் பாதிப்பிலிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நீதிபதி சிவசுப்பிரமணியம் பரிந்துரையை ஏற்று கள் கடையை திறக்க வேண்டும். பால் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
ரேஷன் கடையில் பாமாயில் விற்பனையை தடை செய்து தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வினியோகிக்க வேண்டும்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும். விசைத்தறி மின் கட்டண பாதிப்பில் இருந்து பாதுகாக்க நிரந்தர தீர்வாக மத்திய மாநில அரசு 100 சதவீதம் சோலார் பேனல் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கள் தடை; புரிதல் தேவை
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசுகையில், ''அரசியலமைப்புச் சட்டப்படி கள் இறக்க அனுமதி உண்டு. யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. கள் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே தடையை உடைக்க முடியும்' என்றார்.