/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் நிறுத்தம்? விவசாயிகள் அதிருப்தி
/
நாய் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் நிறுத்தம்? விவசாயிகள் அதிருப்தி
நாய் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் நிறுத்தம்? விவசாயிகள் அதிருப்தி
நாய் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் நிறுத்தம்? விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஆக 20, 2025 10:25 PM
திருப்பூர்; 'தெருநாய்கள் கடித்து பலியாகும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் அரசின் திட்டம் நிறைவடைந்துவிட்டது' என்று தெரிவிக்கப்படுவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெரு நாய்களால் கொல்லப்படும், மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, நாய்கள் கடித்து பலியாகும் மாட்டுக்கு, 37 ஆயிரத்து 500 ரூபாய், ஆட்டுக்கு, 6 ஆயிரம், கோழிக்கு, 200 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன், தமிழக அரசு 61.80 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது.
ஆனால், தற்போது, இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தால் வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில், கால்நடை பராமரிப்புத்துறையினர் அளித்த விளக்கத்தில், ''தெரு நாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் திட்டம் நிறைவடைந்து விட்டது. இழப்பீடு வழங்க வழிவகை எதுவுமில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கிளைக்கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது: இழப்பீடு வழங்குவதில், திருப்பூர் மாவட்டத்துக்கு, 14 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு, அந்த தொகை கொடுக்கப்பட்டு விட்டதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.
திருப்பூரில் மட்டும், ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டியிருக்கிறது.
திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினரிடம் கேட்ட போது, 'கடந்த மாதம், 31ம் தேதி வரை, இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம்,' என்கின்றனர்.
கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், இறக்கும் ஆடுகளை 'ப்ரீஸர் பாக்ஸில்' வைத்து, போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.