/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாமழை போற்றுதும்! பருவமழையை வரவேற்கும் விவசாயிகள்
/
மாமழை போற்றுதும்! பருவமழையை வரவேற்கும் விவசாயிகள்
ADDED : மே 27, 2025 11:47 PM

திருப்பூர் : திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளை பொறுத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்ட, பவானி ஆற்று நீர் தான், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. பி.ஏ.பி., பாசன திட்டம், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட பவானி ஆற்றுநீர் தான் ஆதாரம் என்ற நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, திருப்பூர் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகளை மனம் குளிர செய்திருக்கிறது.
பாண்டியாறு இணைப்பு அவசியம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் ஆதாரம் பவானி ஆற்று நீர் என்பதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் பருவமழை ஆறுதலை அளிக்கிறது. அதோடு, பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தையும் செயல்படுத்திவிட்டால், பவானி ஆற்றில் ஆண்டுமுழுக்க நீர் கிடைக்கும் வாய்ப்பும், இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தில் விவசாயம் செழிக்கவும் வாய்ப்பு ஏற்படும். அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பதிலும் பிரச்னை இருக்காது; பருவமழையின் போது, பெருமளவு நீர் வீணாவதும் தவிர்க்கப்பட்டு, குளம், குட்டைகளில் சேகரமாகும்,'' என்றார்.
- பரமேஸ்வரன், நிறுவனர், உழவர் சிந்தனை பேரமைப்பு