/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற உண்ணாவிரதம்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற உண்ணாவிரதம்
ADDED : மே 30, 2025 12:47 AM
அவிநாசி, ; அவிநாசி நகராட்சி பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாத, நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து அனைத்து வணிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து, அவிநாசி அனைத்து வணிகர் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஜெகதீஸ் குமரன், ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:
அவிநாசி நகராட்சி நெடுஞ்சாலை ஓரத்திலேயே அதிகளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், சேவூர் ரோட்டில் ராஜன் என்பவர் போக்குவரத்து இடையூறு காரணமாக விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது தவிர, கடந்த காலங்களில் எண்ணற்ற விபத்துகள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை மனு கொடுத்தோம்.
கடந்த 2ம் தேதி அகற்றுவதாக தெரிவித்தனர். அவிநாசி தேர்த்திருவிழா முடிந்து, 28ம் தேதி அகற்ற நோட்டீஸ் வழங்கினர். ஆனால், அகற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் சேவூர் ரோடு நகராட்சி எல்லை வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தி, வரும் 2ம் தேதி அவிநாசி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன், உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.