/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் மீது கார் மோதி விபத்து ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற தந்தை கைது: மகனுக்கு 'வலை'

ADDED : செப் 20, 2025 11:47 PM
திருப்பூர் : திண்டுக்கல்லை சேர்ந்தவர் மணிவேல், 25. டீ மாஸ்டர். திருப்பூரில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் (19ம் தேதி) இரவு வேலை முடிந்து, டூவீலரில் காலேஜ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மரக்கடை பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார், டூவீலர் மீது மோதியது.
அதில், மணிவேல் துாக்கி எறியப்பட்டு கீழே விழுந்தார். மோதிய டூவீலரை, நுாறு மீட்டருக்கு கார் இழுத்து சென்றது. அப்பகுதி பொதுமக்கள் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கொங்கணகிரியை சேர்ந்த லோகநாதன், 57 என்பது தெரிந்தது. விபத்து ஏற்படுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால், விபத்தை ஏற்படுத்தியது போதையில் இருந்த மகன் சரவணகுமார், 23 என்பது தெரிந்தது. மகனை, காப்பாற்ற போலீசாரை ஏமாற்றியது தெரிந்தது.
இதுதொடர்பாக, லோகநாதனை கைது செய்த போலீசார் தலைமறைவான சரவணகுமாரை தேடி வருகின்றனர்.