தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தவறுகளை கண்டறியும் தொழில்நுட்ப 'கண்' ஆர்.டி.எக்ஸ். டிஜிட்டல் டெக்னாலஜிஸ் அசத்தல்

 தவறுகளை கண்டறியும் தொழில்நுட்ப 'கண்' ஆர்.டி.எக்ஸ். டிஜிட்டல் டெக்னாலஜிஸ் அசத்தல்

 தவறுகளை கண்டறியும் தொழில்நுட்ப 'கண்' ஆர்.டி.எக்ஸ். டிஜிட்டல் டெக்னாலஜிஸ் அசத்தல்


ADDED : மார் 07, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: கோவை, மயிலம்பட்டியில் செயல்பட்டுவரும் ஆர்.டி.எக்ஸ். டிஜிட்டல் டெக்னாலஜிஸ் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜவுளி துறைக்கான அதிநவீன டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்களை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது. வெளிநாட்டு இயந்திரங்களுக்கு இணையான தரத்தில், உள்நாட்டிலேயே டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்களை தயாரிப்பது, இந்நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

'நிட்டெக்' கண்காட்சியில், இதுவரை எங்கும் கண்டிராத இரண்டு புதுமையான தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது குறித்து, ஆர்.டி.எக்ஸ். டிஜிட்டல் டெக்னாலஜிஸ் நிறுவனர் தீபக் சித்தார்த் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டாக, ஜவுளி துறைக்கான நவீன டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்களை உற்பத்தி செய்து வருகிறோம். ஐரோப்பிய மெஷின்களுக்கு இணையான தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 40 டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்களை, கோவை, திருப்பூர், லுாதியானா பகுதியில் விற்பனை செய்துள்ளோம். முதன்முறையாக தற்போது, போர்ச்சுக்கல் நாட்டுக்கும் மெஷின் ஏற்றுமதியை துவக்கியுள்ளோம்.

'நிட்டெக்' கண்காட்சியில், டிஜிட்டல் பிரின்டிங் மெஷினுடன் பொருத்தப்பட்டு இயங்கும், இரண்டு வகையான ஏ.ஐ., தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆடையில் பிரின்டிங் செய்யும்போது, இம்மியளவு குறை இருந்தாலும் கூட உடனடியாக கண்டறிந்து தெரிவிக்கும்வகையில், இன்டஸ்ட்ரியல் மிஷன் விஷன் கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கி, மிஷினில் பொருத்தியுள்ளோம். முதல் ஆடையிலேயே பிரின்டிங் குறைபாடுகளை கண்டறிந்து, சரி செய்ய முடிவதால், துணி, ஆடைகள் வீணாவது தவிர்க்கப்படும். ஆடைகளின் பிரின்டிங் துல்லியமாக பொறிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

வழக்கமாக ஆட்டோமேட்டிங் பிரின்டிங் மெஷின்களில், கையாலேயே ஸ்கிரீன் வைக்கப்படும். இதற்கு, மூன்று முதல் நான்கு மணிநேரம் வரை செலவிடவேண்டிவரும். 'மெஷின் விஷன் கேமரா' தொழில்நுட்பத்தை இணைத்து, பிரின்டிங் மெஷினை உருவாக்கியுள்ளோம். இது, இயந்திரத்தின் கண் போன்று செயல்படும். இந்த தொழில்நுட்பத்தால், பிரின்டிங் மெஷின் தானே சுயமாக, காலபிரேஷன் மூலம் ஸ்கிரீனை மிக துல்லியமாக செட்டிங் செய்துகொள்ளும். வெறும் பத்தே நிமிடத்தில் இந்த வேலை முடிக்கப்பட்டுவிடும். இத்தகைய தொழில்நுட்பம், இந்தியாவில் வேறு எந்த மெஷினிலும் இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆர்.டி.எக்ஸ். டிஜிட்டல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதுமையான தொழில்நுட்பங்களை, நிட்டெக் கண்காட்சியில், 38, 39 ஸ்டால்களில் பார்வையிடலாம். விவரங்களுக்கு, 95855 55961 என்கிற எண்ணில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us