தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜெய் சாரதா பள்ளியில்'அச்சம் தவிர்' நிகழ்ச்சி

 ஜெய் சாரதா பள்ளியில்'அச்சம் தவிர்' நிகழ்ச்சி

 ஜெய் சாரதா பள்ளியில்'அச்சம் தவிர்' நிகழ்ச்சி


ADDED : ஜன 28, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 08:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்படுகிறது.

அவ்வகையில் நடப்பாண்டு இந்நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் 'நிக்கான்ஸ்' வேலுசாமி தலைமை வகித்தார். பள்ளி அறக்கட்டளை பொருளாளர் சுருதி ஹரிஷ் முன்னிலை வகித்தார்.

கவிஞர் மற்றும் பேச்சாளர் ராகவேந்திரன் பேசியதாவது:

மணவர்கள் சமூக வலைதளங்களில் முகமறியாத நபர்களிடம் ஏமாந்து, காலத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். ஒரு தலைமுறையை மாற்றும் வல்லமை கொண்ட கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மாணவர்களுக்கு நல்ல நண்பர்களும், நற்பழக்கங்களும் இருந்தால் எந்த இலக்கையும் எளிதில் அடையலாம்.

மாணவர்களின் வெற்றியும் சாதனையும் பெற்றோர்களைப் பெருமிதப்படுத்தும். அப்துல்கலாம் போன்ற சாதனையாளர்களின் பாதை நாம் தேர்வு செய்ய வேண்டும். எந்த விதமான சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்ந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் மணி மலர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us