/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலத்தின் கீழ் குப்பை கிடங்கு விபத்து அபாயத்தால் அச்சம்
/
மேம்பாலத்தின் கீழ் குப்பை கிடங்கு விபத்து அபாயத்தால் அச்சம்
மேம்பாலத்தின் கீழ் குப்பை கிடங்கு விபத்து அபாயத்தால் அச்சம்
மேம்பாலத்தின் கீழ் குப்பை கிடங்கு விபத்து அபாயத்தால் அச்சம்
ADDED : பிப் 05, 2026 05:03 AM

உடுமலை: தளி ரோடு மேம்பால துாண்களுக்கு இடையே, பல வித கழிவுகளை குவித்து வைத்து, குப்பை கிடங்காக மாற்றியுள்ளதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம், நகராட்சி அலுவலகம் முன் துவங்கி, 750 மீ., நீளத்துக்கு அமைந்துள்ளது. இப்பாலத்தின் துாண்களுக்கு இடையே, தற்போது பல்வேறு கழிவுகளை குவித்து குப்பைக்கிடங்காக மாற்றியுள்ளனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் மட்டும் சிறிய தடுப்பு அமைத்துள்ளதால், அப்பகுதியில் குப்பையை கொட்டுவதில்லை. பிற பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுடன் இறைச்சி கழிவையும் கொட்டியுள்ளனர்.
இரவு நேரங்களில், இவ்வாறு வீசிச்செல்லப்படும் கழிவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அகல ரயில்பாதை தண்டவாளம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை தேடி வரும் நாய்கள், கூட்டமாக அவ்விடத்தில் சுற்றித்திரிகின்றன.
சிலர் பாலத்தின் துாண்களை ஒட்டி குவித்து வைத்துள்ள குப்பைக்கு தீ வைக்கின்றனர். இதனால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள், விபத்துகள்ஏற்படும் வாய்ப்புள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து, பாலத்தின் துாண்களுக்கு இடையே குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி, தடுப்பு ஏற்படுத்த வேண்டும். பொலிவிழந்து காணப்படும் துாண்களுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்த வேண்டும்.
அகல ரயில்பாதை அருகிலுள்ள புதர்களை அகற்றி, இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா அமைத்தால் இத்தகைய அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என, நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

