/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு
/
குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு
ADDED : அக் 28, 2024 05:55 AM

கொசுத்தொல்லை
பல்லடம், நான்காவது வார்டு, குமரன் வீதி, ஆறு மாதமாக கொசு மருந்து அடிக்கவில்லை. கொசுத்தொல்லை அதிகமாகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- சேகர், குமரன் வீதி.
மின்சாரம் வீண்
சூசையாபுரம் இரண்டாவது வீதியில் பகலிலே தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.
- வின்சென்ட்ராஜ், சூசையாபுரம்.
எரியாத விளக்கு
கலெக்டர் அலுவலகம் எதிர்புறம், கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் ரோட்டில் ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரிவதில்லை.
- ரவி, பல்லடம் ரோடு.
ஜல்லியுடன் நிற்கிறது
தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வீதியில் ரோடு போட ஜல்லி கொட்டி அப்படியே விடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது. ரோடு போட வேண்டும்.
- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)
மழைநீர் தேக்கம்
போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மழை பெய்யும் போதெல்லாம், தண்ணீர் தேங்கி நிற்கிறது. மருத்துவமனை அருகே கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.
- பாலாஜி நவீன், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், பெரிய கடை வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது.
- விக்னேஷ், பெரிய கடை வீதி.
திருப்பூர், முனிசிபல் ஆபீஸ் வீதி, வளர்மதி சந்தில் குழாய் உடைந்து தண்ணீர் வினியோகிக்கும் போதெல்லாம் வீணாகிறது.
- நாராயணசாமி, முனிசிபல் ஆபீஸ் வீதி. (படம் உண்டு)
மண்ணரை, வி.ஏ.ஓ., ஆபீஸ் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் அடிக்கடி வீணாகிறது.
- மேகலா, மண்ணரை. (படம் உண்டு)வழிநெடுக குப்பை
பெருமாநல்லுார் ஊராட்சி, ஈரோடு ரோடு, பனங்காடு பிரிவில் சாலையோர வழிநெடுகிலும் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்ல முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது.
- குமார், பனங்காடு பிரிவு. (படம் உண்டு)
குப்பையால் துர்நாற்றம்
பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் குப்பை முழுமையாக அகற்றாமல் மழையில் அப்படியே நனைந்து விடுவதால், துர்நாற்றம் வீசுகிறது.
- ராம்குமார், பட்டுக்கோட்டையார் நகர். (படம் உண்டு)
மின் விபத்து அபாயம்
அனுப்பர்பாளையம், திலகர் நகர் ஐந்தாவது வீதியில், மரக்கிளைகளுக்குள் மின்கம்பிகள் பயணிக்கிறது. மின்கம்பி உராய்வதால் மின்விபத்து அபாயம் உள்ளது.
- வரதராஜ், திலகர் நகர். (படம் உண்டு)
மறையும் வெளிச்சம்
கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், நான்காவது வீதியில் தெருவிளக்கு வெளிச்சம் சாலையில் தெரியாத அளவு சுற்றிலும், மரக்கிளைகள் வளர்ந்துள்ளன.
- குமார், டி.எஸ்.ஆர்.,லே-அவுட். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், அவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி, மூன்றாவது வீதியில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுதும் முட்புதர் வளர்ந்துள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- மகேஸ்வரி, டீச்சர்ஸ் காலனி.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
- மணி, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
மழைநீர் தேக்கம்
அங்கேரிபாளையம் - அவிநாசிக்கவுண்டம்பாளையம் ரோட்டில் மழை பெய்யும் போதெல்லாம், மூன்றடிக்கு மழைநீர் தேங்கி விடுகிறது. மழைநீர் வெளியேற மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.
- அவிநாசியப்பன், அவிநாசிக்கவுண்டம்பாளையம். (படம் உண்டு)
சாலை அரிப்பு
வீரபாண்டி - குப்பாண்டம்பாளையம் பிரிவு சாலையில் மழைநீர் அதிகளவில் வழிந்தோடுவதால், சாலை அரிக்கப்படுகிறது. மழைநீர் செல்ல சாலையோரம் வழி ஏற்படுத்த வேண்டும்.
- கோவிந்தராஜ், வீரபாண்டி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
ஒளிர்ந்த விளக்கு
திருப்பூர், செங்குந்தபுரத்தில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதாக 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் விளக்குகள் சரிசெய்யப்பட்டு, தற்போது எரிகிறது.
- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)
சாலை சீரமைப்பு
திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே குழாய் உடைந்த தண்ணீர் வெளியேறி சாலை சேதமாகியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், சாலை தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது.
- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)