ADDED : ஏப் 03, 2026 04:36 AM

அ நிறம் | அளவு
தாராபுரம்: நேற்று காலை முதல் நபராக தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மூலனுார், எலுகாம்வலசை சேர்ந்த ஆனந்தி, 41 என்பவர், தனது பெற்றோர் மற்றும் உறவினருடன், சுயேட்சையாக போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், வேட்பாளராக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திவ்யா, 29 அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, கட்சியினருடன், டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க மனு தாக்கல் செய்ய கிளம்பி சென்றனர்.
மதியம், 12:30 மணியளவில் மனு தாக்கல் செய்தார். மேலும் மாற்று வேட்பாளராக அமுதப்பிரியா, 41 மனு தாக்கல் செய்தார்.
தற்போதைக்கு, இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என, இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை த.வெ.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
