/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரம்பிய குளங்கள்; உயரும் நீர்மட்டம்
/
நிரம்பிய குளங்கள்; உயரும் நீர்மட்டம்
ADDED : நவ 27, 2024 09:39 PM

உடுமலை; தொடர் மழையால், குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், குடிமங்கலம் வட்டார விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு, வடகிழக்கு பருவமழையே ஆதாரமாக உள்ளது. கடந்தாண்டு போதிய மழை இல்லாமல், இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது.
இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை சீசன் துவக்கத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதனால், கிராம குளங்களுக்கு நீர்வரத்து கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, உப்பாறு மழை நீர் ஓடைகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணைகள் நிரம்பியது.
இவ்வட்டாரத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை மற்றும் புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பாசன காலத்தில், மழையும் பரவலாக பெய்ததால், அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பெரும்பாலான கிராம குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.