sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தை தொழிலாளருக்கு பணி; நிறுவனங்களுக்கு அபராதம்

/

குழந்தை தொழிலாளருக்கு பணி; நிறுவனங்களுக்கு அபராதம்

குழந்தை தொழிலாளருக்கு பணி; நிறுவனங்களுக்கு அபராதம்

குழந்தை தொழிலாளருக்கு பணி; நிறுவனங்களுக்கு அபராதம்


ADDED : ஜூன் 12, 2025 11:13 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் காயத்ரி அறிக்கை:நிறுவனங்கள் உள்ளிட்ட பணித்தளங்களில், 14 வயதுக்குட்பட்டவர்கள், எவ்வித பணியிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது.

15 முதல், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது. அவர்களை அபாயகரமற்ற பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், தொழிலாளர் துறைக்கு உரிய அறிவிப்பு படிவம் வழங்க வேண்டும். அவர்களுக்கு வேலை நேரம், 6:00 மணி நேரம் மட்டுமே வழங்க வேண்டும். இரவு, 7:00 மணி முதல், காலை, 9:00 மணி வரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. சட்டப்பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

பெற்றோருக்கும் அபராதம்குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு, குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ், கடந்த, 2024, ஜன., முதல் தேதியில் இருந்து தற்போது வரை, 5 மாத காலத்தில், 2 குழந்தை தொழிலாளர் மற்றும், 25 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய தொழிற்நிறுவன உரிமையாளர்கள் மீது, 5.40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புகார் செய்ய...

'குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் எவரேனும் பணியமர்த்தப்பட்டால், 'சைல்டு லைன்' எண், 1098க்கு டயல் செய்து புகார் தெரிவிக்கலாம். http://pencil.gov.in/Users/login என்ற இணைய தளத்திலும் புகார் தெரிவிக்கலாம்; புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.---








      Dinamalar
      Follow us