/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாயுமானவர்' திட்டத்திலும் 'கைரேகை' பிரச்னை
/
'தாயுமானவர்' திட்டத்திலும் 'கைரேகை' பிரச்னை
ADDED : ஆக 21, 2025 08:22 PM
உடுமலை; ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏற்பட்டு வரும் கைரேகை பிரச்னையால், தாயுமானவர் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி கார்டுதாரர் வீடுகளுக்கே சென்று, ரேஷன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டம், மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல் படுத்தப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, கார்டுதாரர்களின் கைரேகை சரிபார்க்கப் படுகிறது. கைரேகை விழுவதில்லை என்ற சிக்கல் ஏற்கனவே உள்ளது.
முதியவர்கள்தான் அதிகளவு இப்பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக, கருவிழியை பதிவு செய்து பொருட்கள் வழங்க விற்பனையாளர்கள் முயற்சிக்கின்றனர்.
இதனால், கடைகளுக்கு வரும் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுகிறது.
இதற்கேற்ப தொழில்நுட்பத்தை மேலும் நவீனப்படுத்த வேண்டும் என்று, ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
'தாயுமானவர்' திட்டத்திலும் இச்சிக்கல் நேர்கிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைரேகை விழுவதில் சிக்கல் ஏற்படுவதால், பலமுறை முயற்சிக்க வேண்டியுள்ளது.
தேவையற்ற நேர விரயம், மன உளைச்சல் ஏற்படுவதுடன், பொருட்கள் வினியோகத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. கைரேகை பிரச்னைக்கு, தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

