தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கைரேகை 'அப்டேட்' அதிகாரிகள் உத்தரவு

 கைரேகை 'அப்டேட்' அதிகாரிகள் உத்தரவு

 கைரேகை 'அப்டேட்' அதிகாரிகள் உத்தரவு


ADDED : ஜூன் 06, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ரேஷன் கார்டுகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகைகளையும் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டும், இன்னும் 20 சதவீதம் வரை பணிகள் முடியாததால் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

இதன்படி, ரேஷன் ஊழியர்கள் தினமும் காலை 7:00 மணிக்கே கaடைக்கு வந்து, ஒரு வாரத்திற்குள் இப்பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும், தினமும் குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களுக்காவது ரேகைப்பதிவை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பல கார்டுதாரர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை; வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இன்னும் அப்டேட் செய்யாமல் உள்ளனர். பலர் சொந்த ஊரில் வசிக்காமலும், இறந்தவர்களின் பெயர்களை நீக்காமலும் அப்படியே வைத்துள்ளனர்.

'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டப்படி அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே ரேகையை அப்டேட் செய்துகொள்ள முடியும் என்பதால், இதனைத்தீவிரப்படுத்த கைரேகை 'அப்டேட்' செய்யாத உறுப்பினர்களுக்கான ரேஷன் பொருட்களைவழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us