/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே பாதை அருகே குப்பையில் தீ விபத்து
/
ரயில்வே பாதை அருகே குப்பையில் தீ விபத்து
UPDATED : ஜூலை 13, 2025 07:01 AM
ADDED : ஜூலை 13, 2025 12:38 AM

திருப்பூர் : திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், 2வது ரயில்வே கேட் பகுதி உள்ளது. இது, ஊத்துக்குளி ரோட்டையும், வடக்கு பகுதியில் கொங்கு மெயின் ரோடு செல்லும் மாநகராட்சி ரோட்டையும் இணைக்கிறது. இதனருகே, ரயில்வே பாதையை ஒட்டிய பகுதியில் ஏராளமான செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.
மேலும், அக்கம்பக்கத்தினரும் குப்பை கழிவுகளை இந்த இடத்தில் கொண்டு சென்று கொட்டுவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் அங்கு குவிந்து கிடந்த குப்பை மற்றும் வளர்ந்து கிடக்கும் புதர்களிலும் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. சில நொடிகளில் இந்த தீ மளமளவென தேங்கி கிடந்த குப்பையில் முழுமையாகப் பரவியது.
பல மீட்டர் தொலைவில் இந்த குப்பையில் தீப்பிடித்து எரியத்துவங்கியது. பல அடி உயரத்துக்கு நெருப்பு கடும் புகையுடன் எரிந்தது. அந்த ரோடு முழுவதும் புகை பரவியது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து வடக்கு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ முற்றிலும் அணைந்து, புகை முழுவதும் அடங்க நீண்ட நேரமாகியது. இதனால், ரயில்வே கேட் வழியாக நீண்ட நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது.