/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு துறை ஒத்திகை
/
பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு துறை ஒத்திகை
ADDED : அக் 15, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் தீயணைப்புத்துறை சார்பில், வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
மடத்துக்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு சார்பில், சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு, கொழுமம் அமராவதி ஆற்றில், வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், தீயணைப்பு துறை வீரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.