/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை வெள்ளத்தில் தப்பிக்க தீயணைப்பு துறை விளக்கம்
/
மழை வெள்ளத்தில் தப்பிக்க தீயணைப்பு துறை விளக்கம்
ADDED : அக் 15, 2024 10:20 PM

உடுமலை : உடுமலையில், தீயணைப்பு துறை சார்பில் வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
உடுமலை தீயணைப்புத்துறை சார்பில், உடுமலை தாலுகா அலுவலகத்தில், வெள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தப்பிக்கும் வழிமுறைகள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில், தீயணைப்புத்துறையினர், வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் சிக்கினால், வீடுகளில் சாதாரணமாக உள்ள, டியூப், டயர், தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு எப்படி தப்பிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.