/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காஸ் கசிவால் வீடுகளில் தீவிபத்து பனியன் நிறுவனத்திலும் பரவிய தீ
/
காஸ் கசிவால் வீடுகளில் தீவிபத்து பனியன் நிறுவனத்திலும் பரவிய தீ
காஸ் கசிவால் வீடுகளில் தீவிபத்து பனியன் நிறுவனத்திலும் பரவிய தீ
காஸ் கசிவால் வீடுகளில் தீவிபத்து பனியன் நிறுவனத்திலும் பரவிய தீ
ADDED : மார் 23, 2025 11:47 PM

திருப்பூர் : திருப்பூர் தெற்கு தோட்டம் பகுதியில், விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், சிறிய அறைகளில், 12 குடியிருப்புகள் உள்ளன. வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். காஸ் கசிவு காரணமாக, அங்குள்ள ஒரு அறையில் காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
அருகே இருந்த மற்ற மூன்று வீடுகளிலும் தீ பரவியது. அருகே உள்ள சையது என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்திலும் தீப்பற்றியது; பனியன் துணிகள் எரிந்தன. திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
காஸ் கசிவு காரணமாக, சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சென்ட்ரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.