ADDED : ஜன 01, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், தேசிய மாணவர் படை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.சி.சி., அதிகாரி பிரதீப் குமார் துவக்கிவைத்தார்.
தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். கல்லுாரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தீயணைப்பு துறையினரை பாராட்டினார்.

