தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செக்யூரிட்டிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி

 செக்யூரிட்டிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி

 செக்யூரிட்டிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி


ADDED : பிப் 10, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழகம் முழுதும் உள்ள, 384 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் உதவியாளர்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு நேற்று நடந்தது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நடந்தது. வடக்கு தீயணைப்பு அலுவலகத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் தலைமையில் பயிற்சி நடந்தது.

மருத்துவமனை, தொழில் நிறுவனம், பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் செக்யூரிட்டிகள் பங்கேற்றனர்.

பயிற்சியில், தாங்கள் பணிபுரியும் இடங்களில் தீ ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளவும், தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புத்தகம் மற்றும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us