ADDED : ஏப் 15, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீயணைப்பு தியாகிகள் தினத்தையொட்டி திருப்பூர் வடக்கு தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பணியின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு துாணில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள் இளஞ்செழியன், வீரராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேற்று முதல் ஒரு வாரத்துக்கு தீ தொண்டு வாரமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.