/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர் 'லபக்'
/
வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர் 'லபக்'
வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர் 'லபக்'
வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர் 'லபக்'
ADDED : பிப் 14, 2024 01:40 AM

அவிநாசி;அவிநாசி அருகே வீட்டுக்குள் நுழைந்த பத்தடி நீள சாரைப்பாம்பை, தீயணைப்பு வீரர்கள், லாவகமாக பிடித்து காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.
அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயன் கோவில் காலனி - பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் பத்தடி நீள சாரைப்பாம்பு ஒன்று அருகில் உள்ள புதரில் இருந்து புகுந்தது . இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஏறத்தாழ ஒரு மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பு ஏறத்தாழ, 10 அடி நீளம் இருந்தது. அதன்பின், பைபாஸ் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விடுவித்தனர்.