ADDED : அக் 18, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்திருந்தனர். மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு, 180 பேர்; மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு பகுதியில், 204 பேர் என, மாவட்டத்தில், 380 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது, கடைகளுக்கு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் போலீசார் களஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடைகள் அமைய உள்ள பகுதி பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா, அருகே காஸ் குடோன்கள் ஏதாவது அமைந்துள்ளதா என, ஆய்வு செய்து வருகின்றனர். விண்ணப்பிக்க இன்னும் நாட்கள் உள்ளதால், கள ஆய்வுக்கு பின், விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.