UPDATED : செப் 26, 2026 11:07 PM
ADDED : செப் 26, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற இப்பயிற்சியை மாநகராட்சி கமிஷனர் அமித் துவக்கி வைத்தார். எல்.ஜி. மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் முதலுதவி பயிற்சிக் குழுவினர், அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மோகன், உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
