ADDED : மார் 11, 2024 01:25 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்;தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 55 டன் மீன் விற்பனைக்கு வந்தது. மத்தி, கிலோ 120, பாறை, 150, அயிலை, 250, வாவல், 230, வஞ்சிரம், 500, படையப்பா, 350, நண்டு, 450 ரூபாய்க்கு விற்றது. கடந்த, வெள்ளிக்கிழமை சிவராத்திரி, நேற்று மாசி அமாவாசை என்பதால், காலை முதலே மீன் விற்பனை மந்தமாக இருந்தது.
மொத்தமாக மீன்களை வாங்கி, விற்பனைக்கு கொண்டு சென்ற மொத்த மீன் வியாபாரிகளும், வழக்கத்தை விட விற்பனை சற்று குறைந்ததாக தெரிவித்தனர்.
காலை, 10:00 மணிக்கு பகுதியளவு மீன் விற்றுத்தீர்ந்து விடும் நிலையில், நேற்று மதியம் வரை, 60 சதவீத மீன்கள் கூட விற்காமல் இருந்தது. இரண்டாவது வாரமாக மீன் விற்பனை மந்தமானதால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
