/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் பள்ளியில் 'பிஷ்ஸ்பார்க் - 2025'
/
பிரன்ட்லைன் பள்ளியில் 'பிஷ்ஸ்பார்க் - 2025'
ADDED : ஜூலை 13, 2025 12:46 AM

திருப்பூர் : திருப்பூர் பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளி, திருப்பூர் ரோட்டரி கிளப் ஆகியன இணைந்து தொழில் முனைவோரை உருவாக்கும் 'பிஷ்ஸ்பார்க் - 2025' நிகழ்ச்சியை நடத்தின.
பள்ளி வளாகத்தில் 3 நாள் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஹார்டியன் ெஹல்த் மேனேஜ்மென்ட் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். ரோட்டரி நிர்வாகிகள் ரவி; விஷ்வநாதன்; நாகராஜ்; பரசுராமன், வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.
தொழில் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் போட்டி மற்றும் வினாடி வினா ஆகியன நடத்தி பரிசளிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு 4 ஆயிரம்; மூன்றாம் பரிசு 3 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசு ஆயிரம் ரூபாய் என அனைத்து பிரிவுகளிலும் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கும்பரிசளிக்கப்பட்டது.
வெற்றி பெற்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் வழங்கினர்.