/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐவர் பூப்பந்தாட்ட போட்டி; கோவை அணிக்கு கோப்பை
/
ஐவர் பூப்பந்தாட்ட போட்டி; கோவை அணிக்கு கோப்பை
ADDED : ஜன 04, 2024 12:39 AM

பல்லடம் : பல்லடத்தில் நடந்த ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில், கோவை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பல்லடம் பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில், 10ம் ஆண்டு பூப்பந்தாட்ட போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 37 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், கோவை என்.ஆர்.பி.சி., அணி, 35:20, என்ற புள்ளி கணக்கில், பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லுாரி அணியை தோற்கடித்தது. கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி அணி, 35:25 என்ற புள்ளி கணக்கில் கோவை ஹிமாலயா அணியை வென்று மூன்றாம் இடத்தை கைப்பற்றியது. இதனால், ஹிமாலயா அணி நான்காம் இடத்தையும், பல்லடம் பூப்பந்தாட்ட குழு ஐந்தாம் இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு விழாவில், கோவை அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. நந்தகுமார் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடந்தது.
நகர தி.மு.க., செயலாளர் ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன், ரெயின்போ ரோட்டரி பட்டய தலைவர் நடராஜன், பழனிசாமி, பிரகாஷ், சிவசங்கரி உட்பட பலர் பங்கேற்றனர்.