/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டுக்கூடு கிலோ ரூ.700 நிர்ணயம் செய்யுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
/
பட்டுக்கூடு கிலோ ரூ.700 நிர்ணயம் செய்யுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கூடு கிலோ ரூ.700 நிர்ணயம் செய்யுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கூடு கிலோ ரூ.700 நிர்ணயம் செய்யுங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2025 10:19 PM

உடுமலை; பட்டுக்கூடு உற்பத்தியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், கிலோவுக்கு ரூ. 700 நிர்ணயம் செய்யவும், இன்சூரன்ஸ் திட்டத்தை புதுப்பிக்கவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள மைவாடியில், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.இதில், திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், உடுமலை அமராவதி செக்போஸ்ட் பகுதியில், செயல்பட்டு வந்த சில்வர் மைன்ஸ் தனியார் பட்டு நூற்பாலைக்கு விற்பனை செய்த கூடுகளுக்கு உரிய விவசாயிகளுக்கு, இரு ஆண்டுகளுக்கு மேல், தொகை வழங்கவில்லை; இதனை விரைந்து பெற்றுத்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுக்கூடுக்கான விலை குறைந்தபட்சம் ஒரு கிலோவுக்கு, ரூ.700 நிர்ணயிக்க வேண்டும். பல பகுதிகளில், பட்டுப்புழு வளர்ப்பு தோல்வி அடைந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
கடந்தாண்டு, செப்., 15ல், காப்பீடு திட்டம், மீண்டும் புதுப்பிக்காமல் உள்ளதால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும், மல்பெரி பயிர்க்கடன் தொகையில் உரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மல்பெரிக்கு பரிந்துரை செய்யப்பட்ட உரத்தை மட்டும் பயன்படுத்த முடியும்.
பிற உரங்களை பயன்படுத்து முடியாது. கூட்டுறவு வங்கியில் மல்பெரி பயிர் கடன் வழங்குவதற்கு, சிபில் ஸ்கோர் பார்க்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ரத்து செய்யவும், மானியத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தளவாடப் பொருட்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடைய, பட்டு வளர்ச்சி துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில பொருளாளர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் கணக்கன்பட்டி செல்வராஜ் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.