/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்டிகை சீசனால் கோவக்காய்க்கு நிலையான விலை; விவசாயிகள்
/
பண்டிகை சீசனால் கோவக்காய்க்கு நிலையான விலை; விவசாயிகள்
பண்டிகை சீசனால் கோவக்காய்க்கு நிலையான விலை; விவசாயிகள்
பண்டிகை சீசனால் கோவக்காய்க்கு நிலையான விலை; விவசாயிகள்
ADDED : செப் 20, 2024 10:05 PM

உடுமலை : தேவை அதிகரித்துள்ளதால், கோவக்காய்க்கு இந்த சீசனில், நிலையான விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம், கிளுவங்காட்டூர், எலையமுத்துார், துங்காவி, சின்னப்பன்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், விளைநிலங்களில், பந்தல் அமைத்து, பாகற்காய், கோவக்காய், பீர்க்கன், புடலை உள்ளிட்ட காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர்.
இதில், ஓணம் சீசனை இலக்காக வைத்து, கோவக்காய் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். கொடி, 90 நாட்கள் வளர்ந்த பிறகு, காய்களை அறுவடை செய்தனர்.
ஓணம் பண்டிகைக்கு முன், தட்டுப்பாடு அதிகரித்து, கோவக்காய் கிலோ, 30-35 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
ஓணம் பண்டிகைக்கு பிறகு, விலை சற்று குறைந்தது. தற்போது, தமிழகத்தில், புரட்டாசி சீசனையொட்டி, காய்கறிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, கோவக்காய் கிலோ, 23-25 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'ஓணம் பண்டிகையின் போது, கோவக்காய்க்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது சற்று விலை குறைந்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு புரட்டாசி மாதத்தில், அதிக வெப்பநிலை நிலவுவதால், விளைச்சல் சற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்துள்ளதால், இனி விலை குறையாது என்ற நம்பிக்கையில் உள்ளோம்,' என்றனர்.