ADDED : பிப் 26, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டி, மத்திய அதிவிரைவு படை வீரர்கள், அவிநாசி போலீசார் ஆகியன இணைந்து, அவிநாசியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து துவங்கிய கொடி அணிவகுப்பு பேரணி, பல்வேறு வீதிகள் வழியாக, அவிநாசி புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது.
மத்திய அதிவிரைவு படை 105 பிரிவின் கோவை துணை கமாண்டர் கேசவன் தலைமையில் ஆயுதம் ஏந்திய 45 வீரர்கள், அவிநாசி இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, முத்து மாரியம்மாள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கொடி அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
