/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லிப்ட்' வசதியுடன் அடுக்குமாடி ஜனவரிக்குள் திறப்பு விழா
/
'லிப்ட்' வசதியுடன் அடுக்குமாடி ஜனவரிக்குள் திறப்பு விழா
'லிப்ட்' வசதியுடன் அடுக்குமாடி ஜனவரிக்குள் திறப்பு விழா
'லிப்ட்' வசதியுடன் அடுக்குமாடி ஜனவரிக்குள் திறப்பு விழா
ADDED : டிச 21, 2024 11:30 PM

பல்லடம்: தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் ஊராட்சி, பெரும்பாளி கிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம், 432 குடியிருப்புகளுடன், தரைத்தளம் உட்பட, 9 தளங்களுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. கடந்த, 2021ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகளின் பங்களிப்புத் தொகை, 3.09 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஏற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, இதர வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை போன்று அல்லாமல், முதன் முறையாக, 'லிப்ட்' வசதியுடன் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில், 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, வரும் ஜன., மாத இறுதிக்குள், பயனாளிகள் தேர்வும் முடிக்கப்பட்டு, திறப்பு விழா காண வாய்ப்பு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.