/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தகங்களை புரட்டலாம்; போட்டித்தேர்வில் 'மிரட்டலாம்'
/
புத்தகங்களை புரட்டலாம்; போட்டித்தேர்வில் 'மிரட்டலாம்'
புத்தகங்களை புரட்டலாம்; போட்டித்தேர்வில் 'மிரட்டலாம்'
புத்தகங்களை புரட்டலாம்; போட்டித்தேர்வில் 'மிரட்டலாம்'
ADDED : பிப் 17, 2024 02:00 AM

திருப்பூர்;போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்ட, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நுால கத்தில், 3,500 புத்தகங்கள் காத்திருக்கின்றன.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.
வி.ஏ.ஓ., - இளநிலை உதவியாளர், வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 4 தேர்வு அறிவித்துள்ளது; வரும் ஜூன் 9ல், தேர்வு நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 'குரூப் - 4' தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்பு, கடந்த, 8ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் திறன் பரிசோதிக்கப்படுகிறது. தற்போது, மாவட்டம் முழுவதும் 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 100 மாணவர்கள், பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
நவீன வகுப்பறையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழி காட்டும் வகையில், போட்டித் தேர்வுக்கான பிரத்யேக புத்தகங்களுடன் கூடிய நுாலகமும் இயங்கி வருகிறது. இந்நுாலகத்தில் தற்போது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் போட்டித்தேர்வுக்கான புதிய புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
எல்லா வகை தேர்வுகளுக்கும் வழிகாட்டும்வகையில், 3,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நுாலகத்தில் இடம்பெற்றுள்ளன.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், குரூப் -4 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர் அனைவரும் வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, பிரத்யேக நுாலகமும் செயல்படுகிறது. காலை, 10:00 முதல் மதியம், ஒரு மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மதியம், ஒரு மணி முதல் மாலை, 5:00 மணி வரை, நுாலகத்திலுள்ள போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை பெற்று, படித்துக்கொள்ளலாம்.
எல்லாவகை தேர்வுகளுக்கும் வழிகாட்டும்வகையில், 3,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நுாலகத்தில் இடம்பெற்றுள்ளன. நுாலகத்தினை சிறந்த முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- சுரேஷ்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.