/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., சார்பில் மலரஞ்சலி, கூட்டு பிரார்த்தனை
/
பா.ஜ., சார்பில் மலரஞ்சலி, கூட்டு பிரார்த்தனை
ADDED : ஏப் 26, 2025 12:21 AM

திருப்பூர்: ஜம்மு - காஷ்மீர், பஹல்காமில், தீவிரவாத தாக்குதலால் பலியானோரின் சாந்தியடைய வேண்டி, பா.ஜ., சார்பில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், கூட்டு பிரார்த்தனையும் நேற்று நடந்தது.
திருப்பூர், குமரன் சிலை முன் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மலர்க்கொடி, முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து உட்பட ஏராளமானோர், மலர் அஞ்சலி செலுத்தினர்.
தீவிரவாதிகள் தாக்குதலால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமாக வலியுறுத்தியும், மவுன ஊர்வலம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஊர்வலம் நடத்த, போலீசார் தடை விதித்தனர்.பா.ஜ., நிர்வாகிகள் போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தனர்.
தொடர்ந்து, காஷ்மீரில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'சாந்தி மந்திரம்' பாராயணம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மலர்துாவி மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து, அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து பேசினர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசிவருவதாககூறி, சுந்தரவல்லிக்கு கண்டனம் தெரிவித்த கட்சியினர், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.