/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாயும் கழிவு நீர்... பறக்கும் புழுதி! சாலைகளில் சங்கடம்: இதற்கான தீர்வு எக்கணம்?

ADDED : ஜன 24, 2025 11:42 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சூசையாபுரம் மேற்கு பகுதி யிலிருந்து ரயில்வே பாதையை ஒட்டி ரோடு அமைந்துள்ளது. இப்பகுதியில் நீண்ட காலம் முன் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பயன் பாட்டில் இருந்தது.
அது தற்போது சிதிலமடைந்தும், கழிவு நீர் அளவு அதிகரித்து வரும் நிலையிலும், சிரமம் நிலவியது.
மழை நாட்களிலும், அதிகளவில் கழிவு நீர் வரும் போதும், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி இந்த ரோட்டில் சென்று பாய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய வடிகால் கட்டி, அருகேயுள்ள பிரதான கால்வாயில் இதனை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டது.
இதற்காக புதியதாக வடிகால் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி தற்போது நடந்து வருகிறது. பயன்பாட்டில் உள்ள வடிகாலில் கழிவு நீர் செல்வதில் தடை செய்து ஒரு பகுதியில் கட்டுமானப்பணி நடக்கிறது. இப்பணி காரணமாக வடிகாலில் கழிவுநீர் செல்ல வழியின்றி கல்லம்பாளையம் ரோட்டில் சென்று பாய்கிறது.
இந்த ரோட்டை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள் பயன்படுத்துகின்றனர். ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் இவ்வழியாகச் செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கட்டுமானப்பணி முடியும் வரை உரிய வகையில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவு நீர் அகற்ற நடவடிக்கை எடுத்து, வடிகால் பணி விரைவாக முடிக்க வேண்டும்.