ADDED : ஏப் 13, 2026 09:26 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்;ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தை சேர்ந்த லுன் சிங், 27. திருப்பூர் - அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகே தங்கி, தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். காலை, திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி பறக்கும்படை குழுவினர் சிவன் தியேட்டர் அருகே வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே பைக்கில் வந்த லுன்சிங்கை நிறுத்தி விசாரித்ததில், 1.75 லட்சம் ரூபாயை கொண்டுசென்றது தெரியவந்தது.
தான் பணிபுரியும் நிறுவனத்தின் தொகையை வங்கியில் செலுத்த எடுத்துச்சென்றதாக லுன் கூறினார்; உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
