ADDED : டிச 25, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள், தத்தம் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், நஞ்சப்பா பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். கோவை, சின்மயா மிஷன் பூஜ்ய ஸ்ரீ. விக்னேஷ் சைதன்யா, பூஜை நடத்தினார். பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி, பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் என, 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.