/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால விகாஸ் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை
/
பால விகாஸ் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை
ADDED : ஜூலை 20, 2025 01:29 AM

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தின் பால விகாஸ் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை நடத்தினர்.
திருப்பூர், ராம் நகர் பகுதியில் சத்ய சாய் விஹார் அமைந்துள்ளது. ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் பால விகாஸ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
முன்னதாக, சாய் பக்தர்கள் பங்கேற்ற சாய் பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து, பால விகாஸ் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.
பெற்றோர்களின் பாதங்களை சுத்தப்படுத்தி, மலர் துாவி பூஜித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து உறுதி மொழி ஏற்பும், சத்ய சாய் சேவகர்கள் சார்பில் சிறப்புரையும் நடைபெற்றது.
தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் பாலவிகாஸ் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சேவா நிறுவன நிர்வாகிகள் மற்றும் சாய் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசத்ய சாய் மந்திர் மற்றும் சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.